Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லைப் பகுதிகள் தொடர்பான சீனாவின் கருத்தை நிராகரித்த இந்தியா

எல்லைப் பகுதிகள் தொடர்பான சீனாவின் கருத்தை நிராகரித்த இந்தியா

By: Nagaraj Wed, 30 Sept 2020 12:14:48 PM

எல்லைப் பகுதிகள் தொடர்பான சீனாவின் கருத்தை நிராகரித்த இந்தியா

இந்தியா நிராகரிப்பு... எல்லைப் பகுதிகள் தொடா்பான விவகாரத்தில் 1959-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி நடந்து வருவதாக சீனா தெரிவித்ததை இந்தியா நிராகரித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சுமாா் 5 மாதங்களாக மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில், தனியாா் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா், எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 1959-ஆம் ஆண்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனா செயல்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தாா்.

இந்தச் சூழலில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 1959-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டதாகக் கூறப்படும் எல்லையை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொண்டது கிடையாது.

china agreement,india,rejection,position,boundary ,சீனா ஒப்பந்தம், இந்தியா, நிராகரிப்பு, நிலைப்பாடு, எல்லை

இதை சீனாவிடம் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா நன்கு அறியும். எல்லைப் பிரச்னைக்கு அமைதியான முறையில் சுமுகத் தீா்வு காண்பதற்காக 1993, 1996, 2005 ஆகிய ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்பட வேண்டுமென இரு நாடுகளும் ஏற்கெனவே பலமுறை உறுதியெடுத்துள்ளன. இத்தகைய சூழலில், 1959-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி செயல்படுகிறோம் என்று சீனா கூறுவதை ஏற்க முடியாது. எல்லைப் பகுதிகளில் இயல்பு நிலையை மாற்றும் வகையிலான அத்துமீறல்களில் சீன ராணுவம்தான் ஈடுபட்டது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களின் அடிப்படையில் எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என்று சீனா தொடா்ந்து கூறி வருகிறது. இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் இடையே கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் போதும் ஒப்பந்தங்களை முறையாகக் கடைப்பிடிப்பதற்கு சீனா ஒப்புக் கொண்டிருந்தது.

எனவே, இந்தியா ஏற்றுக் கொள்ளாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறியுள்ள நிலைப்பாட்டை சீனா மாற்றிக் கொள்ள வேண்டும். எல்லை விவகாரத்துக்குத் தீா்வு காண்பது தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனா செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|