Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அருணாசல பிரதேசம், லடாக் பிராந்தியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவுக்கு இந்தியா பதிலடி

அருணாசல பிரதேசம், லடாக் பிராந்தியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவுக்கு இந்தியா பதிலடி

By: Karunakaran Fri, 16 Oct 2020 2:58:04 PM

அருணாசல பிரதேசம், லடாக் பிராந்தியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவுக்கு இந்தியா பதிலடி

கொரோனாவுக்கு எதிராக உலகமே போராடி வரும்நிலையில், அதனை உலகுக்கு அறிமுகப்படுத்திய சீனா, அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் செயலில் இறங்கி உள்ளது. லடாக்கின் கிழக்கு எல்லை பகுதிகளான பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பிராந்தியங்களில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன படைகள் ஊடுருவ முயன்றதால், இந்திய-சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது ஜூன் மாதத்தில் வன்முறையாக மாறி இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.

ஆகஸ்டு மாத கடைசியில் மீண்டும் இந்திய பகுதிக்குள் அத்துமீற முயன்ற சீன வீரர்களின் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர். செப்டம்பர் மாத தொடக்கத்தில் வானை நோக்கி துப்பாக்கியால் சுடும் அளவுக்கு இருநாட்டு வீரர்களின் மோதல் தீவிரமடைந்தது. சீனாவின் முயற்சிக்கு இந்திய வீரர்கள் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதால், எப்படியாவது ஆக்கிரமிப்பு திட்டத்தை நிறைவேற்றும் முனைப்பில் லடாக்கில் சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைகளை சீனா குவித்து காத்திருக்கிறது.

india,china,arunachal pradesh,ladakh region ,இந்தியா, சீனா, அருணாச்சல பிரதேசம், லடாக் பகுதி

சீனாவின் இந்த திட்டத்தை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்துவது என்ற முடிவோடு இந்திய வீரர்களும் அங்கு காத்திருக்கின்றனர். இதுவரை இருதரப்பு ராணுவ அதிகாரிகள் 7 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றனர். மேலும், இரு நாட்டு ராணுவ, வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். அமைதி திட்டங்கள் என அமைதியின் பாதையை நோக்கி நகர்ந்தாலும், அதில் எடுக்கும் முடிவுகளை சீனா செயல்படுத்துவதில்லை.

இந்நிலையில் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் கட்டப்பட்டிருந்த 44 பாலங்களை கடந்த 12-ந்தேதி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்ததற்கு, ஆத்திரமடைந்த சீனா ‘இதுவே இருதரப்பு பதற்றத்துக்கான மூல காரணம்’ என கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளிடம் எதிர்பார்ப்பது போல, இந்தியாவும் அதன் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் கருத்து சொல்லாமல் இருக்கும் என நம்புகிறது என்று கூறினார்.

Tags :
|
|