Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஷ்மீர், இலங்கை விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - டி.கே.சிவக்குமார்

காஷ்மீர், இலங்கை விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - டி.கே.சிவக்குமார்

By: Karunakaran Thu, 18 June 2020 1:06:42 PM

காஷ்மீர், இலங்கை விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - டி.கே.சிவக்குமார்

சமீபத்தில் லடாக் எல்லையில் இந்திய-சீன படையினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு மோதலை தடுத்தனர். இருப்பினும் அங்கு பதற்றம் நிலவியது. இதனால் இருநாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் மீண்டும் லடாக் எல்லையில் இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சீனாவின் இந்த அத்துமீறிய செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இருநாட்டு அதிகாரிகள் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த ஓப்புக்கொண்டுள்ளனர். சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அரசை பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

dk shivakumar,ladakh border,china attack,border issue ,டிகேசிவக்குமார்,லடாக் எல்லை,சீனா,எல்லை பிரச்சினை

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் பேட்டி அளித்தபோது, இதுதொடர்பாக கூறுகையில், எல்லை பிரச்சினையில் சீனாவுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு, அமைதி, ஒற்றுமைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அண்டை நாடுகளுடன் அமைதியை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ள இந்த சூழ்நிலையில், காஷ்மீர், இலங்கை விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனாவுடன் மோதல் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags :