Advertisement

பாகிஸ்தானின் திட்டங்களுக்கு இந்தியா கடும் கண்டனம்

By: Nagaraj Tue, 29 Sept 2020 4:50:54 PM

பாகிஸ்தானின் திட்டங்களுக்கு இந்தியா கடும் கண்டனம்

இந்தியா கடும் கண்டனம்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் தேர்தலை நடத்துவதற்கும், அதை தனது ஐந்தாவது மாகாணமாக மாற்றுவதற்கும் முடிவு செய்துள்ள பாகிஸ்தானின் திட்டங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது என்று கூறியது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியான கில்கிட்-பால்டிஸ்தானின் நிலை குறித்து இரு நாடுகளும் சமீபத்திய வாரங்களில் பல முறை பேசி வருகின்றன. மேலும் ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளில் இந்த பிரச்சினையை எழுப்பின.

கில்கிட்-பால்டிஸ்தானின் சட்டமன்றத்திற்கான தேர்தலை நவம்பர் 15’ஆம் தேதி நடத்த பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இப்பகுதியை பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த மாகாணமாக மாற்றும்.

“நவம்பர் 15, 2020 அன்று நடைபெறவிருக்கும் கில்கிட்-பால்டிஸ்தான் சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிப்பு தொடர்பான அறிக்கைகளை நாங்கள் கண்டிருக்கிறோம். இந்திய அரசு தனது வலுவான எதிர்ப்பை பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு தெரிவித்ததோடு, நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்த மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

india,election,pakistan,occupied kashmir,condemnation ,இந்தியா, தேர்தல், பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர், கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்கள், கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் என அழைக்கப்படும் பகுதிகள் உட்பட, 1947’இல் சட்டவிரோதமாக பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.” என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு சட்டவிரோதமாகவும் பலவந்தமாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் மீது எந்த உரிமையும் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கவோ அல்லது கடந்த ஏழு தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆக்கிரமித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சுரண்டல் ஆகியவற்றை மேற்கொள்வதை மறுக்க முடியாது எனக் கூறியுள்ளது.

Tags :
|