Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 7,725 கிலோ எடையுள்ள மனிதநேய உதவி பொருட்களை இந்தியா அளிப்பு

உக்ரைனுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 7,725 கிலோ எடையுள்ள மனிதநேய உதவி பொருட்களை இந்தியா அளிப்பு

By: vaithegi Tue, 13 Sept 2022 10:56:29 AM

உக்ரைனுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 7,725 கிலோ எடையுள்ள மனிதநேய உதவி பொருட்களை இந்தியா அளிப்பு

உக்ரைன் : உக்ரைன் நாட்டுக்கான புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தூதர் ஹர்ஷ் குமார் ஜெயின், உக்ரைன் மக்களின் தேவைக்காக அந்த நாட்டு சுகாதார துறை துணை மந்திரி ஒலெக்சி யரெமென்கோவிடம் 7,725 கிலோ எடையுள்ள மனிதநேய உதவி பொருட்களை வழங்கி உள்ளார்.

இதை அடுத்து அவற்றில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற வை அடங்கியுள்ளன. உக்ரைன் நாட்டுக்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து முதன்முறையாக மனிதநேயம் அடிப்படையிலான உதவிகளை இந்தியா அனுப்பி வருகிறது.

ukraine,india,essential drugs,medical equipment ,உக்ரைன் ,இந்தியா ,அத்தியாவசிய மருந்துகள் ,மருத்துவ உபகரணங்கள்

உக்ரைன் மீது போர் தொடங்கியது முதல், பகைமைகளை மறந்து போரை கைவிட்டு வன்முறைக்கு முடிவு ஏற்படுத்தும்படி இந்தியா தொடர்ந்து இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்து வருகிறது.

மேலும் இரு நாட்டு தலைவர்களும் தூதரக மற்றும் பேச்சுவார்த்தை வழிக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கூறியதுடன், போரை முடிவுக்கு கொண்டு வரும் அனைத்து தூதரக முயற்சிகளுக்கும் துணை நிற்போம் என தெரிவித்து இருந்தது.

Tags :
|