Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகின் 3 முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் - முகேஷ் அம்பானி

உலகின் 3 முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் - முகேஷ் அம்பானி

By: Karunakaran Wed, 16 Dec 2020 08:03:56 AM

உலகின் 3 முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் - முகேஷ் அம்பானி

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக் நிறுவனம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் 9.99 சதவீத பங்குகளை வாங்க ரூ. 43,574 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், பேஸ்புக் பியூவல் பார் இந்தியா 2020 நிகழ்வில் பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் பேசுகையில், ஜியோ பிளாட்பார்ம்ஸ் உடனான கூட்டணி மூலம் இந்தியாவில் இயங்கி வரும் பல லட்சம் சிறு வியாபாரங்களுக்கு உதவியாக இருக்க முடியும். பெருந்தொற்று பாதிப்புக்கு பின் சிறு தொழில் முனைவோர்களுக்கு டிஜிட்டல் தளங்கள் அவசியமானது. சிறு வியாபாரங்களுக்கு உதவி செய்வதே பேஸ்புக்கில் எங்களின் நோக்கம். இதற்கு இந்தியாவை தவிர சிறந்த இடம் இருக்க முடியாது என குறிப்பிட்டார்.

india,economies,reliance,mukesh ambani ,இந்தியா, பொருளாதாரங்கள், நம்பகத்தன்மை, முகேஷ் அம்பானி

அதன்பின் பேசிய ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, வாட்ஸ் அப்பில் இந்தியாவில் பல மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். ஜியோ நிறுவனமும் பல மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. ஜியோ மற்றும் பேஸ்புக் கூட்டணி பொதுமுடக்கத்தின்போது எவ்வாறு செயல்பட்டன என்பதற்கு எங்களுடைய சொந்த உதாரணம் உள்ளது. பேஸ்புக்கின் முதலீடுதான் இந்த இயக்கத்துக்கு காரணமாக அமைந்தது என தெரிவித்தார்.

மேலும் அவர், ஜியோவுக்கு மட்டுமல்ல, இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அந்நிய நேரடி முதலீட்டிற்கும். ஜியோ மற்றும் பேஸ்புக் இடையேயான எங்கள் கூட்டு முக்கியமானது. பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவில் இல்லாதபோது கொரோனா போன்ற தொற்று ஏற்பட்டு இருந்தால் நாடு பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் 3 முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என தெரிவித்தார்.

Tags :
|