Advertisement

வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் இந்தியா

By: Nagaraj Thu, 27 July 2023 07:09:29 AM

வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் இந்தியா

புதுடில்லி: 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வான் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் பெற்ற வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தரையில் இருந்து ஏவி எதிரி நாட்டு விமானங்களை தாக்கும் வகையில் அந்த ஏவுகணை அமைப்பு வடிவமைக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவிற்கு பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

armies,list,air target,india,joining,technology ,ராணுவங்கள், பட்டியல், வான் இலக்கு, இந்தியா, இணையும், தொழில்நுட்பம்

3 நிலைகளை கொண்ட அந்த ஏவுகணை அமைப்பால் வெவ்வேறு தூரங்களில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க முடியும் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.

20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின் மூலம், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் 400 கிலோ மீட்டர் தொலைவு வான் இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ராணுவங்களின் பட்டியலில் இந்தியாவும் இணையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|