Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணுவ நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் தொடங்கும்... தலிபான் அரசு அறிவிப்பு

ராணுவ நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் தொடங்கும்... தலிபான் அரசு அறிவிப்பு

By: Nagaraj Fri, 02 Dec 2022 9:17:21 PM

ராணுவ நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் தொடங்கும்... தலிபான் அரசு அறிவிப்பு

காபூல்: தலிபான் அரசின் அறிவிப்பு... ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் காரணமாக கைவிடப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் தொடங்கும் என தலிபான் அரசு அறிவித்துள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்தது.இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகள் சீர்குலைந்தன. இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை இந்தியா வழங்கியது

projects in afghanistan,afghanistan,india,infrastructure,again,projects ,projects in Afghanistan, ஆப்கானிஸ்தான், இந்தியா, உள்கட்டமைப்பு, மீண்டும், திட்டங்கள்

இந்நிலையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான தூதரக உறவு கடந்த ஜூன் மாதம் மீண்டும் தொடங்கியது. இந்தச் சூழலில், இந்தியா பாதியில் நிறுத்திய உள்கட்டமைப்புத் திட்டங்களை மீண்டும் தொடரும் என்று ஆப்கான் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.


இது தொடர்பாக அந்த அமைச்சகம் கூறுகையில், “முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அரசியல் மாற்றங்களால் பாதியில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் அவை மீண்டும் தொடரப்படுகின்றன. இந்தியா 20 கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடர விரும்பம் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

Tags :
|
|