Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்

ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்

By: Nagaraj Fri, 09 June 2023 7:42:21 PM

ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்

ஜெர்மனி: இந்தியா முதலிடம்... ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் 15 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது.

ஜூன் 1ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் பிஸ்டல், ரைபிள், ஷாட்கன் என பல்வேறு பிரிவுகளில் 46 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

india,top,usa,korea,medals ,இந்தியா, முதலிடம், அமெரிக்கா, கொரியா, பதக்கங்கள்

மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சைன்யம், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தனுஷ் ஸ்ரீ காந்த், ஆடவர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அமன்பிருத் சிங் உள்ளிட்டோர் தங்கம் வென்றனர்.

போட்டியில் இந்தியா மொத்தமாக 6 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 15 பதக்கங்கள் வென்று பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 12 பதக்கங்களுடன் கொரியா 2ம் இடத்தையும், 9 பதக்கங்களுடன் அமெரிக்கா 3ம் இடத்தையும் பிடித்தன. கடந்தாண்டு நடைபெற்ற போட்டியிலும் 33 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|