Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்

அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்

By: Nagaraj Wed, 15 Mar 2023 11:41:54 PM

அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்

ஸ்டாக்ஹோம்: பட்டியலில் முதலிடம்... சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், ஆயுத ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான வருடாந்திர அறிக்கையை நேற்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மொத்த ஆயுத ஏற்றுமதியில் 40% அமெரிக்காவிலிருந்து மட்டுமே.

இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. 16% ஆயுதங்கள் அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பிரான்ஸ் 11%, சீனா 5.2%, ஜெர்மனி 4.2%, இத்தாலி 3.8%, இங்கிலாந்து 3.2%, ஸ்பெயின் 2.6%, தென் கொரியா 2.4%, இஸ்ரேல் 2.3% அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


top,threat,india,arms,imports ,முதலிடம், அச்சுறுத்தல், இந்தியா, ஆயுதங்கள், இறக்குமதி

அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா மட்டும் மொத்த ஆயுத இறக்குமதியில் 11% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் ரஷ்யா 45 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா தனது ஆயுதங்களில் 29% பிரான்சிலிருந்தும், 11% அமெரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்கிறது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. இதன் காரணமாக, 1993 முதல், சர்வதேச ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Tags :
|
|
|
|