Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தையில் கனடா விவகாரம் இல்லை

இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தையில் கனடா விவகாரம் இல்லை

By: Nagaraj Thu, 28 Sept 2023 5:03:12 PM

இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தையில் கனடா விவகாரம் இல்லை

அமெரிக்கா: அமெரிக்கா அளித்த விளக்கம்... மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை கடந்த வாரம் குவாட் நாடுகளின் அமைச்சர்களுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போது கனடா விவகாரம் இடம் பெறவில்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

நியூயார்க்கில் ஐநா.சபையின் 78 வது கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஜெய்சங்கர் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார்.

canada,investigation,india,usa,not speaking,explanation ,கனடா, விசாரணை, இந்தியா, அமெரிக்கா, பேசவில்லை, விளக்கம்

குவாட் நாடுகளின் அமைச்சர்களின் சந்திப்பில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த சந்திப்புகள் குறித்து பதிவிட்ட பிளிங்கென் இந்தியா உள்ளிட்ட பல்வேறுநாடுகளின் அமைச்சர்களுடன் பேச்சு நடத்திய போது கனடா விவகாரம் விவாதிக்கப்படவில்லை.

ஏற்கனவே கனடா நடத்தி வரும் விசாரணையில் ஒத்துழைக்கும்படி இந்தியாவைக் கேட்டுக் கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|