Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை மாத்தளை விமான நிலையத்தை இந்தியா இயக்காது - மகிந்த ராஜபக்சே

இலங்கை மாத்தளை விமான நிலையத்தை இந்தியா இயக்காது - மகிந்த ராஜபக்சே

By: Karunakaran Sat, 11 July 2020 8:56:34 PM

இலங்கை மாத்தளை விமான நிலையத்தை இந்தியா இயக்காது - மகிந்த ராஜபக்சே

இலங்கையில் ஹம்பன்தொட்டா அருகே மாத்தளை சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் ந‌‌ஷ்டத்தில் இயங்கி வந்ததால், இலங்கையுடன் சேர்ந்து இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு சிறிசேனா-ரணில் விக்ரமசிங்கே அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

தற்போது இதுகுறித்து பிரதமர் மகிந்த ராஜபக்சே ஹம்பன்தொட்டாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கூறினார். இலங்கை நாடாளுமன்ற தேர்தல், ஆகஸ்டு 5-ந் தேதி நடக்க உள்ளதால், தற்போது தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

mahinda rajapaksa,sri lanka,matale airport,india ,மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா, மாத்தலே விமான நிலையம், இந்தியா

ஹம்பன்தொட்டாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பேசியபோது, ஹம்பன்தொட்டா அருகே எனது கிராமத்தில் உள்ள மாத்தளை சர்வதேச விமான நிலையம் ந‌‌ஷ்டத்தில் இயங்கி வந்தது. அந்த விமான நிலையத்தை இலங்கையுடன் சேர்ந்து இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு சிறிசேனா-ரணில் விக்ரமசிங்கே அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார்.

அதன்பின் பேசிய அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நானும், என் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் இந்தியாவுக்கு சென்றிருந்தபோது, மாத்தளை விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். எங்கள் வேண்டுகோளை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதனால்தான், விமான நிலையத்தை காப்பாற்ற முடிந்தது என்று கூறினார்.

Tags :