Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விரைவில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்

விரைவில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்

By: Nagaraj Fri, 07 Oct 2022 11:31:09 AM

விரைவில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்

ஆக்லாந்து: 5வது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா, இந்த பத்தாண்டு முடிவில் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

நியூசிலாந்துக்கு முதல்முறையாக பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா காலத்தில் தடுப்பூசி தயாரிப்புகளை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்தவர்களில் நாங்களும் ஒருவராக இருந்தோம்.

தொடர்ந்து தடுப்பூசி தயாரிப்புகளை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்து வருகிறோம். எங்கள் சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடும் அதே சூழலில், மற்றவர்களுக்கு உதவ நாங்கள் ஒரு தீவிரமான முடிவை எடுத்தோம். அதன்படி, இலவச தடுப்பூசிகளை அணுக முடியாத நாடுகளில் கவனம் செலுத்தினோம்.

afghanistan,corona,minister jaishankar,new zealand,russia-ukraine war ,ஆக்லாந்து, இந்தியா, நியூசிலாந்து, நியூசிலாந்து பிரதமர், ரஷ்யா-உக்ரைன், வெளியுறவுத்துறை அமைச்சர்

ரஷ்யா – உக்ரைன் போரால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதும் பெரும் விவாதத்திற்குரியது. 5வது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா, இந்த பத்தாண்டு முடிவில் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அவருக்கு பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை தெரிவித்தார்.


அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நனையா மகுடாவையும் சந்தித்துப் பேசினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

Tags :
|