Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐ.நா.சபையுடனான வளர்ச்சி கூட்டு நிதிக்காக ரூ.115 கோடி நிதியை வழங்கிய இந்திய தூதர் திருமூர்த்தி

ஐ.நா.சபையுடனான வளர்ச்சி கூட்டு நிதிக்காக ரூ.115 கோடி நிதியை வழங்கிய இந்திய தூதர் திருமூர்த்தி

By: Karunakaran Thu, 06 Aug 2020 11:21:23 AM

ஐ.நா.சபையுடனான வளர்ச்சி கூட்டு நிதிக்காக ரூ.115 கோடி நிதியை வழங்கிய இந்திய தூதர் திருமூர்த்தி

வளரும் நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகளில் ஆதரவு அளிக்க இந்தியா உறுதி கொண்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா.சபையுடனான கூட்டு வளர்ச்சி நிதியாக 15.46 மில்லியன் டாலர் நிதிக்கான காசோலையை நியூயார்க்கில் ஐ.நா. சபையின் தென்-தெற்கு ஒத்துழைப்புக்கான அலுவலகத்தில் அதன் இயக்குனர் ஜார்ஜ் செடீக்கிடம் இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி நேரில் அளித்தார்.

இந்த நிதியில் 6 மில்லியன் டாலர் மொத்த நிதிக்கானதாகும். மேலும் இதில் அனைத்து வளரும் நாடுகளும் கூட்டாண்மைக்கு தகுதி உடையவை. மீதியுள்ள நிதி 9.46 மில்லியன் டாலர் காமன்வெல்த் நாடுகளுக்கானவையாகும். இந்தியா-ஐ.நா. நிதி அதன் ஆரம்ப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பலன்களை அளித்துள்ளதாக ஜார்ஜ் செடீக் தெரிவித்துள்ளார்.

indian ambassador,thirumurthy,rs 115 crore,un development fund ,இந்திய தூதர், திருமூர்த்தி, ரூ .115 கோடி, ஐ.நா. வளர்ச்சி நிதி

இதுகுறித்து ஜார்ஜ் செடீக் கூறுகையில், இந்த நிதியை தொடர்ந்து வளர்ப்பதற்கான இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு, அதன் பயனுள்ள திட்டங்களின் தொகுப்பை காட்டுகிறது. மேலும், அதன் கூட்டாண்மையானது உண்மையான தென்-தெற்கு ஒற்றுமை மற்றும் உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சவால்களை எதிர்ப்பதில் இந்திய தலைமையின் நிரூபணத்தையும் காட்டுவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் நாடுகளிடையே ஒற்றுமைக்கான அழைப்பு, கொரோனா வைரஸ் பின்னணியில் ஒரு பெரிய எதிரொலியை கண்டறிந்துள்ளது. உலகமெங்கும் உள்ள வளர்ந்து வரும் நாடுகள், பொது சுகாதாரம், வறுமை குறைப்பு மற்றும் சமூக நல்வாழ்வு ஆகியவற்றில் அவர்கள் செய்த சாதனைகள், ஒரு பின்னடைவை தடுக்க போராடுகின்றன. எப்போதும் இந்தப் பின்னணியில் இந்திய அரசு, சக வளரும் நாடுகளை அவர்களின் தேசிய வளர்ச்சி முன்னுரிமைகளில் ஆதரிப்பதற்கான தனது உறுதியை புதுப்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :