Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கர்ப்பிணியை மீட்ட ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கர்ப்பிணியை மீட்ட ராணுவம்

By: Nagaraj Sun, 15 Jan 2023 8:27:00 PM

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கர்ப்பிணியை மீட்ட ராணுவம்

காஷ்மீர்: கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கர்ப்பிணி பெண்ணை இந்திய ராணுவம் மீட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கர்ப்பிணி பெண்ணை இந்திய ராணுவம் மீட்டுள்ளது.

குப்வாராவின் தண்டார் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

indian army,informed,pregnant,yesterday, ,ஜம்மு-காஷ்மீர், பனிப்பொழிவு, போக்குவரத்து

ஆனால் அங்கு அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாததால், குப்வாராவில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேவேளை, பனிப்பொழிவு காரணமாக வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய ராணுவம் சார்பில் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு கர்ப்பிணி பெண் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த பெண்ணுக்கு தற்போது அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கர்ப்பிணிப் பெண்களை இந்திய ராணுவம் வீட்டுக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :