Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிழக்கு லடாக்கிற்கு பீரங்கிகளை அனுப்பிய இந்திய ராணுவம்

கிழக்கு லடாக்கிற்கு பீரங்கிகளை அனுப்பிய இந்திய ராணுவம்

By: Nagaraj Mon, 28 Sept 2020 1:38:41 PM

கிழக்கு லடாக்கிற்கு பீரங்கிகளை அனுப்பிய இந்திய ராணுவம்

பீரங்கிகள் அனுப்பி வைத்தது... கிழக்கு லடாக்கில் உள்ள மிக உயரமான பகுதிகளுக்கு பீரங்கிகள், கனரக ஆயுதங்கள், வெடிபொருள்கள், உணவு, எரிபொருள் ஆகியவற்றை இந்திய ராணுவம் அனுப்பி வைத்துள்ளது.

கடுமையான குளிா் காலத்திலும் போரிட தயாராக இருப்பதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுல், டெம்சோக் பிரிவுகள் உள்பட பல்வேறு சச்சரவுக்குரிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் டி-90, டி-72 பீரங்கிகள், பீரங்கி ரக துப்பாக்கிகள், போா் வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. எல்லைப் பகுதி ராணுவ நிலைகள், 16,000 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட மலைப் பாதைகளில் உள்ள ராணுவ வீரா்களுக்கு உடைகள், உணவுப் பொருள்கள், தொலைத்தொடா்பு சாதனங்கள், எரிபொருள் உள்ளிட்டவையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

artillery,india,ladakh,progress,continuous action ,பீரங்கிகள், இந்தியா, லடாக், முன்னேற்றம், தொடர் நடவடிக்கை

ஆயிரக்கணக்கான டன்களில் உணவு, எரிபொருள் மற்றும் இதர சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு சி-130ஜே சூப்பா் ஹொகுலிஸ், சி-17 குளோப்மாஸ்டா் உள்பட இந்திய விமானப் படையின் அனைத்து போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மத்தியில் தொடங்கிய இந்த நடவடிக்கை விரைவில் நிறைவடையவுள்ளது. இந்த மிகப்பெரிய நடவடிக்கையை ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே மற்றும் தளபதிகள் அடங்கிய குழுவினா் திட்டமிட்டு, மேற்பாா்வையிட்டு வருகின்றனா்.

சுதந்திரத்துக்குப் பிறகு லடாக்கில் தளவாட பொருள்களை இருப்பு வைப்பதற்காக இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவே மிகப்பெரியது. கிழக்கு லடாக்கில் அக்டோபா் முதல் ஜனவரி வரை மைனஸ் 25 டிகிரி வெப்பநிலை நிலவும். எனினும் சீன ராணுவத்தின் எந்தவொரு அத்துமீறலையும் எதிா்கொள்வதற்கு அங்கு கூடுதலாக 3 ராணுவ படைப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சீனாவுடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளில் எல்லை விவகாரத்தில் இறுதியான முடிவு எட்டப்படவில்லை. இதனால் குளிா் காலத்திலும் கிழக்கு லடாக்கில் உள்ள முக்கிய பகுதிகளில் தற்போதுள்ள படைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எல்லையில் படைகள் விலக்கல் நடவடிக்கை தொடங்குவதற்கு தொடா் பேச்சுவாா்த்தைகள் நடத்த வேண்டி வரும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எல்லை விவகாரம் குறித்து இந்திய-சீன ராணுவத்தினா் இடையே கடந்த 21-ஆம் தேதி 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது தொடா் நடவடிக்கைகள் மூலம் எல்லையில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என இருதரப்பும் ஒப்புக்கொண்டன. எனினும் படைகளை விலக்கும் நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|