Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நிலைகளை தகர்த்த இந்திய ராணுவம்

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நிலைகளை தகர்த்த இந்திய ராணுவம்

By: Karunakaran Fri, 12 June 2020 09:54:53 AM

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நிலைகளை தகர்த்த இந்திய ராணுவம்

பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து அத்துமீறி தாக்குதல் நடத்துவது வழக்கம். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் எப்போதும் இந்திய ராணுவம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது.

indian army,pakistan,border fight,infernal attack , இந்திய ராணுவம் , பாகிஸ்தான்,எல்லைப்பகுதி,அத்துமீறி தாக்குதல்

சிறிய ரக மற்றும் கனரக ஆயதங்கள், மோர்ட்டார் ரக குண்டுகள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் எதிர்தாக்குதலை நடத்தியது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி முழுவதும் பாகிஸ்தான் அத்துமீறியிருந்தது.

இந்நிலையில், இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்த பாகிஸ்தான் ராணுவம் மீது துல்லியமான மற்றும் வலுவான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ரஜோரி செக்டாரில் இருந்த பாகிஸ்தான் நிலைகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Tags :