Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பருந்துகளை பயன்படுத்தும் இந்திய ராணுவம்... எதற்கு தெரியுங்களா!

பருந்துகளை பயன்படுத்தும் இந்திய ராணுவம்... எதற்கு தெரியுங்களா!

By: Nagaraj Wed, 30 Nov 2022 9:20:47 PM

பருந்துகளை பயன்படுத்தும் இந்திய ராணுவம்... எதற்கு தெரியுங்களா!

டேராடூன்: பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் ஆளில்லா விமானங்கள் மூலம் போதைப்பொருள், துப்பாக்கிகள் மற்றும் கரன்சி நோட்டுகள் வீசப்படுவது வாடிக்கையாக உள்ளது.


ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்திய ராணுவம் மோப்ப நாய்களுடன் பயிற்சி பெற்ற பருந்துகளை தனது நடவடிக்கைக்கு பயன்படுத்துகிறது.இது, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைக்குள் ட்ரோன்கள் ஊடுருவும் அச்சுறுத்தலைச் சமாளிக்க பாதுகாப்புப் படையினருக்கு உதவும்,” என்றார்.

destroy enemy drones,drones,indian army,hawk ,ஆளில்லா விமானங்களை, இந்திய ராணுவம், பருந்து

இந்தியா-அமெரிக்கா இடையேயான 18வது கூட்டு ராணுவப் பயிற்சி கடந்த சனிக்கிழமை உத்தரகாண்ட் மாநிலம் அவுலியில் தொடங்கியது.இதில், பருந்துகளை பயன்படுத்தி எதிரி ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்துவது குறித்து இந்திய ராணுவம் நடைமுறை விளக்கம் அளித்தது.

இப்பறவை இப்படி ஒரு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே போர் உத்திகள் மற்றும் நுட்பங்களை பரிமாறிக்கொள்ளும் நோக்கத்தில் ஆண்டுதோறும் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.

Tags :
|