Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் 21 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விசா மோசடியில் ஈடுபட்ட இந்தியர் கைது

அமெரிக்காவில் 21 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விசா மோசடியில் ஈடுபட்ட இந்தியர் கைது

By: Karunakaran Sun, 23 Aug 2020 4:14:55 PM

அமெரிக்காவில் 21 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விசா மோசடியில் ஈடுபட்ட இந்தியர் கைது

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆஷிஷ் சாஹ்னி என்ற இந்தியர் வசித்து வருகின்றார். இவர் தனது நிறுவனத்தின் பேரில் எச்1பி விசாக்களுக்கு விண்ணப்பித்திருந்தார். அவர் சமர்ப்பித்த விசா விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் போலி என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

பின்னர் அதிகாரிகள் இதுகுறித்து ஆஷிஷ் சாஹ்னியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, 48 வயதான ஆஷிஷ் சாஹ்னி 4 நிறுவனங்களின் பெயரில் போலியான விவரங்களை சமர்ப்பித்தது தெரிய வந்தது.

indian,arrest,us,visa fraud ,இந்தியன், கைது, அமெரிக்கா, விசா மோசடி

மேலும் விசாரணையில் மோசடி செய்து எச்1பி விசாக்களை ஆஷிஷ் சாஹ்னி பெற்று தருவது தெரியவந்தது. கடந்த 2011 முதல் 2016 வரையில் மோசடி செய்து 21 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆஷிஷ் சாஹ்னி வருமானம் ஈட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.157 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் இதனைத்தொடர்ந்து சாஹ்னியை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எச்1பி விசா மோசடியில் ஈடுபட்ட இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|
|