Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சை அருகே இந்திய கம்யூனிஸ்ட் காத்திருப்பு போராட்டம்

தஞ்சை அருகே இந்திய கம்யூனிஸ்ட் காத்திருப்பு போராட்டம்

By: Nagaraj Wed, 16 Nov 2022 11:56:09 PM

தஞ்சை அருகே இந்திய கம்யூனிஸ்ட் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் சின்னமுத்தாண்டிப்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே கிடக்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தஞ்சை மாவட்டம் சின்ன முத்தாண்டிப்பட்டியில் அமைந்துள்ளது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி. கடந்த 3 வருடங்களாக நிரந்தர செயலர் இல்லாமல் பூட்டியே கிடக்கும் இந்த தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை திறக்க வேண்டும். நிரந்தர செயலரை பணி நியமனம் செய்ய வேண்டும். நடப்பு சாகுபடிக்கு வங்கியை திறந்து பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் இரா.முகில் தலைமையில் தொடக்க வேளாண்மை வங்கி முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.

conclusion,pending,temporary secretary,works,crop loan ,முடிவு, காத்திருப்பு, தற்காலிக செயலர், பணிகள், பயிர்கடன்

மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், ஒன்றிய துணைத் தலைவர் கோவி.க.சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் லதா சுப்பிரமணியன், நிர்வாகிகள் கார்த்திக், பெரியசாமி, அய்யாராசு, கண்ணையன், அமிர்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தகவலறிந்து சின்ன முத்தாண்டிப்பட்டிக்கு வந்த கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட பதிவாளர் பாண்டிதுரை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனே இ-சேவை மையத்திற்கு ஆபரேட்டர் நியமித்தார்.

மேலும் பயிர் காப்பீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் பயிர்கடன் கோரி விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் அரசு அறிவித்த ஏக்கர் 1-க்கு ரூ.35,900/- வரும் சனிக்கிழமைக்குள் வழங்கப்படும், தற்காலிக செயலர் நியமிக்கப்படுவார். பின்னர் 2 மாத காலத்திற்குள் புதிய செயலர் நியமிக்கப்படுவார் என்று உறுதியளித்ததை அடுத்து காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags :
|