Advertisement

இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த வைரம் எம்.எஸ். தோனி

By: Nagaraj Sat, 15 Aug 2020 8:54:01 PM

இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த வைரம் எம்.எஸ். தோனி

ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் தோனி. இந்திய அணிக்கு கிடைத்த வரமாகவே பார்க்கப்படுபவர் எம்.எஸ். தோனி. தலைச்சிறந்த கேப்டன் மட்டுமின்றி பேட்டிங், ஃபீல்டிங், விக்கெட் கீப்பிங் என சிறப்பாக செயல்படக் கூடியவர். விக்கெட் கீப்பராக இருந்தும் பந்து வீசுவதும் உண்டு.

கிரிக்கெட் களத்தில், அப்போது இருக்கும் சூழ்நிலையில் எவ்வாறு முடிவு எடுக்க வேண்டும் என்று நன்கு தெரிந்து வைத்திருப்பவர். களத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் 10ல் 9 கச்சிதமாக சரியாக அமைந்துவிடும். தோல்வியின் விளிம்பில் இருந்தாலும், விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை நின்று போராடுபவர்.

எப்படிபட்ட சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்கும் அவரது குணமும், ரசிகர்கள் அவரை விரும்ப முக்கிய காரணம். 3 ஐ.சி.சி கோப்பைகளை கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்திருக்கும் அவரது பெயர் என்றென்றும் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.

தனது 5-வது சர்வதேச போட்டியில் இருந்து சாதனை படைக்க துவங்கிய தோனியின் மைல்கல் 22 ஆண்டுகளாக தொடர்ந்தது. கங்குலி, சச்சின், திராவிட், லட்சுமண் ஆகிய தலைச்சிறந்த வீரர்கள் அணியில் இருந்த நிலையில், தன்னுடைய வலுவான இடத்தை பிடிக்க தோனிக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டது.

சர்வதேச போட்டியில் கால்பதித்த 3-வது ஆண்டிலேயே அவர் தேசிய அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒன்றரை ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும், அவருடைய கேப்டன் சாதனைகளை யாராலும் நெருங்க முடியவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.

Tags :
|