Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை முடித்துக்கொண்டு ஈரான் புறப்பட்ட இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை முடித்துக்கொண்டு ஈரான் புறப்பட்ட இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்

By: Karunakaran Sat, 05 Sept 2020 5:26:22 PM

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை முடித்துக்கொண்டு ஈரான் புறப்பட்ட இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த 2-ம் தேதி ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு, இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் வந்தடைந்தார். அப்போது, ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரியுடன் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ராஜ்நாத்சிங் ஈடுபட்டார்.

மேலும் எல்லை விவகாரம் சிக்கலை ஏற்படுத்தி வரும் நிலையில், சீன பாதுகாப்புத்துறை மந்திரி இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்திக்க கோரிக்கை விடுத்தார். இதனால் சீன பாதுகாப்புத்துறை மந்திரியை ராஜ்நாத்சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடனான சந்திப்பின்போது எல்லை விவகாரத்தை சுமூகமாக தீர்த்துகொள்வது தொடர்பாக ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.

indian defense minister,rajnath singh,iran,shanghai cooperation conference ,இந்திய பாதுகாப்பு அமைச்சர், ராஜ்நாத் சிங், ஈரான், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு

ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று அங்குள்ள காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடனான சந்திப்பிற்கு பின், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், அமைதி நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டுமென்றால், எல்லையை தாண்டாமல் இருக்க வேண்டும் என சீன பாதுகாப்புத்துறை மந்திரியின் முன் ராஜ்நாத்சிங் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகளின் கூட்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராஜ்நாத் பங்கேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் நிறைவடைந்ததையடுத்து தனது ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டுள்ள ராஜ்நாத் தற்போது ஈரான் புறப்பட்டு சென்றார். அப்போது, ஈரான் நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் அமீர் ஹடமீரை ராஜ்நாத்சிங் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

Tags :
|