Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் - நிபுணர்கள் குழு அறிவிப்பு

2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் - நிபுணர்கள் குழு அறிவிப்பு

By: Monisha Fri, 29 May 2020 4:34:47 PM

2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் - நிபுணர்கள் குழு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தொழில்கள் நிறுவனங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. இதனால், இந்திய பொருளாதாரத்தில் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனை தெளிவுப்படுத்தும் விதமாக இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 40 சதவிகிதம் வீழ்ச்சியை காணும் என்று எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் அதாவது மார்ச் 31-ந் தேதி வரை இந்திய பொருளாதாரம் 5 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என்று நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இதுவரை 1951-ம் நிதியாண்டில் இருந்து 5 முறை பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தற்போது 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று அந்த குழு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

corona virus,curfew,fiscal year 2020-21,indian economy,sbi thesis ,கொரோனா வைரஸ்,ஊரடங்கு,2020-21 நிதியாண்டு,இந்திய பொருளாதாரம்,ஸ்.பி.ஐ. ஆய்வறிக்கை

வளர்ச்சிக்கு பெரிய பாதிப்பு, நிரந்தர பொருளாதார இழப்பு மற்றும் பொருளாதார முழுவதும் இருப்பு நிலையில் சரிவு ஆகிய காரணங்களால், பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில 10 சதவிகிதம் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதில் 1.2 சதவிகிதம் நேரடி தூண்டுதல் நடவடிக்கையை கொண்டுள்ளது.

அதே நேரத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று அந்த நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. 6.5 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக வளர்ச்சி விகிதம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|