Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்து கோயில்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம்

இந்து கோயில்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம்

By: Nagaraj Fri, 27 Jan 2023 7:38:14 PM

இந்து கோயில்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம்

கான்பெரா: இந்திய தூதரகம் கண்டனம்... ஆஸ்திரேலியாவில் உள்ள மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் ஆஸ்திரேலியாவில் மூன்று இந்து கோவில்கள் தாக்கப்பட்டன. அவற்றைக் கொள்ளையடித்ததுடன், கோயில் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டன.

முதல் தாக்குதல் மெல்போர்னில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் நடந்தது. இதைத் தொடர்ந்து விக்டோரியாவில் உள்ள சிவ விஷ்ணு கோயில் மற்றும் மெல்போர்னில் உள்ள இஸ்கான் கோயில் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள மூன்று இந்து கோவில்கள் தாக்கப்பட்டு, இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுதியதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கான்பெராவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: இந்த தாக்குதல்கள் திட்டமிடப்பட்டவை. காலிஸ்தான் ஆதரவாளர்களும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பும் வெளியில் இருந்து வந்த உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

பல மொழிகள், பல மதங்கள் மற்றும் பல கலாச்சாரங்கள் இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இதுவே இந்தியாவின் அடிப்படை மரபு. தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்கள் இதை சீர்குலைக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

australia,hindu,indian-embassy,temples, ,ஆஸ்திரேலியா, இந்திய தூதரகம், இந்து, கோவில்கள்


Tags :
|