Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றம்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றம்

By: Karunakaran Sun, 16 Aug 2020 12:55:47 PM

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றம்

இந்தியா முழுவதும் நேற்று 74-வது சுதந்திர தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் வசித்து வரும் இந்தியர்கள் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர்களுக்கு வாழ்த்து கூறினர்.

இந்நிலையில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி போன்ற மாகாணங்களில் வசித்து வரும் இந்தியர்கள் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடியான மூவர்ண கொடியை ஏற்றி கொண்டாடினர்.

indian national flag,new york times square,india,independence day ,இந்திய தேசிய கொடி ,, நியூயார்க் டைம்ஸ் சதுக்கம், இந்தியா, சுதந்திர தினம்

இந்த சுதந்திர தினவிழாவில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் பங்கேற்றனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கமும் ஒன்றாகும். இங்கு இந்திய தேசிய கொடி கொடி ஏற்று விழா நடப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன், ஆகஸ்டு 5-ம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றபோது, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் பூமி பூஜை படங்கள் 3டியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|