Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர்களுக்கான 2 புதிய சலுகைகளை வழங்கியுள்ளது

இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர்களுக்கான 2 புதிய சலுகைகளை வழங்கியுள்ளது

By: vaithegi Tue, 05 Sept 2023 4:15:43 PM

இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர்களுக்கான 2 புதிய சலுகைகளை வழங்கியுள்ளது

இந்தியா: இந்தியாவில் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.20 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 200 குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் பொதுமக்களுக்கு கூடுதலாக 2 சேவைகளை அறிமுகம் செய்து உள்ளது.

அதாவது, நுரையீரல் பாதிப்பினை ஏற்படாத வகையில் 5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்கள் மூலமாகவே பயன்படுத்தப்படும் அயன் பாக்ஸை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது.

cylinders,indian oil company ,சிலிண்டர்கள் ,இந்தியன் ஆயில் நிறுவனம்

இதற்கு அடுத்ததாக, இந்தியன் ஆயில் நிறுவனம் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக உபயோக சிலிண்டர்கள் இரண்டிற்கும் ஒரே வடிவிலான ரப்பர் குழாய் மற்றும் ரெகுலேட்டரை விற்பனை செய்து கொண்டு வருகிறது. வணிக உபயோக சிலிண்டரில் கூடுதல் அழுத்தம் காரணமாக இந்த ரப்பர் குழாய் மற்றும் ரெகுலேட்டர் பொருந்தாமல் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டது.

இதனால், வணிக சிலிண்டருக்கென புது ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாயை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. மேலும், பொது மக்களின் தேவைக்காக சலுகை விலையில் ரப்பர் குழாய் வழங்க இருப்பதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுயிருக்கிறது.

Tags :