Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் போலீஸ் 7 மாதம் சிறை தண்டனை

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் போலீஸ் 7 மாதம் சிறை தண்டனை

By: Karunakaran Tue, 07 July 2020 10:56:42 AM

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் போலீஸ் 7 மாதம் சிறை தண்டனை

சிங்கப்பூரில் பெண் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஹேமாவதி குணசேகரன் என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு வயது 37. இந்நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 2 ஐபேடுகளை, அவர்களுக்குத் தெரியாமல் அடகு கடையில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.

பல நாட்கள் ஆகியும் ஹேமாவதி குணசேகரன் அந்த ஐபேடுகளை திரும்ப பெறவில்லை. இதனால், அந்த அடகுக் கடைக்காரர் அந்த ஐபேடுகளை விற்பனை செய்துவிட்டார். இந்த விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது. இதனால் ஹேமாவதி குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

indian-origin,woman police,singapore,sentenced ,இந்திய வம்சாவளி, பெண் போலீஸ், சிங்கப்பூர், தண்டனை

இந்த வழக்கு விசாரணை சிங்கப்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில், ஹேமாவதி குணசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கான தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.

நேற்று இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்த நீதிபதி, ஹேமாவதி குணசேகரனுக்கு 7 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் அதிகாரியாக இருந்து சக போலீசாரின் ஐபேடுகளை விற்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :