Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எகிப்தில் உள்ள பழமையான மசூதிக்கு செல்லும் இந்திய பிரதமர் மோடி

எகிப்தில் உள்ள பழமையான மசூதிக்கு செல்லும் இந்திய பிரதமர் மோடி

By: Nagaraj Sun, 25 June 2023 11:54:08 AM

எகிப்தில் உள்ள பழமையான மசூதிக்கு செல்லும் இந்திய பிரதமர் மோடி

எகிப்து: எகிப்தில் உள்ள பழமையான அல் ஹக்கிம் மசூதிக்கு இன்று இந்திய பிரதமர் மோடி செல்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு கட்டப்பட்டுள்ள பழமை வாய்ந்த அல் ஹக்கீம் மசூதிக்கு இன்று செல்கிறார்.

egypt,indian ambassador,ancient mosque,indian prime minister,goes ,எகிப்து, இந்திய தூதர், பழமையான மசூதி, இந்திய பிரதமர், செல்கிறார்

எகிப்தில் 11ஆம் நூற்றாண்டில் ஃபாத்திமிட் வம்சத்தினர் ஆட்சி செய்தபோது கட்டப்பட்டதே அல்-ஹக்கீம் மசூதி. இந்தியாவில் குடியேறிய போஹ்ரா சமூகத்தினர், ஃபத்திமிட் வம்சத்தினரிடமிருந்து உருவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1970ம் ஆண்டு முதல் மசூதியைப் புதுப்பித்த போஹ்ரா சமூகத்தினர் அதனை பராமரித்து வருவதாக எகிப்துக்கான இந்தியத் தூதர் அஜித் குப்தே தெரிவித்துள்ளார்.

Tags :
|