Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜி.20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய இந்திய பிரதமர் மோடி... ஆஸ்திரேலியா பிரதமர் பாராட்டு

ஜி.20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய இந்திய பிரதமர் மோடி... ஆஸ்திரேலியா பிரதமர் பாராட்டு

By: Nagaraj Sun, 10 Sept 2023 10:32:00 PM

ஜி.20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய இந்திய பிரதமர் மோடி... ஆஸ்திரேலியா பிரதமர் பாராட்டு

புதுடில்லி: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக ஜி20 கூட்டத்தை நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிப்பது குறித்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தினோம் என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி ஜி20 உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார்.

consultation,conducted,australia prime minister,india,twitter account ,ஆலோசனை, நடத்தினோம், ஆஸ்திரேலியா பிரதமர், இந்தியா, டுவிட்டர் பதிவு

இந்த உச்சி மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின. இந்த ஜி20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது,குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக ஜி20 கூட்டத்தை நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிப்பது குறித்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தினோம் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|