Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மூத்த குடிமக்கள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு சலுகை..இந்தியன் ரயில்வே ...அறிவிப்பு விரைவில் வெளிவரும்

மூத்த குடிமக்கள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு சலுகை..இந்தியன் ரயில்வே ...அறிவிப்பு விரைவில் வெளிவரும்

By: vaithegi Tue, 26 July 2022 7:07:25 PM

மூத்த குடிமக்கள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு சலுகை..இந்தியன் ரயில்வே ...அறிவிப்பு விரைவில் வெளிவரும்

இந்தியா: தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. இதனால் அனைத்து வித சேவைகளும், பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு கொண்டு வருகின்றன. மேலும் மூத்த குடிமக்களுக்கு ரயிலில் பயணம் செய்ய பல ஆண்டுகளாக சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்த சலுகையும் நிறுத்தப்பட்டது.

இதனால் மூத்த குடிமக்கள் பயணம் செய்வதில் பெரும் சிரமம் மேற்கொண்டார்கள். இதனால் இச்சலுகையை தொடர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. மேலும் இந்த கோரிக்கையின் பேரில் தற்போது மீண்டும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு சலுகை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

indian railways,senior citizens,privilege ,இந்தியன் ரயில்வே,மூத்த குடிமக்கள்,சலுகை

இதுகுறித்து வெளியாகி வரும் தகவலின்படி, மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பல வகை பயணிகளுக்கு ரயில் கட்டணத்தில் சில சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

மேலும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் சராசரியாக 50 சதவீதத்திற்கும் அதிகமான பயணச் செலவை தேசிய போக்குவரத்து நிறுவனம் ஏற்கிறது என கூறினார்.

இந்த நிலையில் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மீண்டும் ரயில்வே கட்டணத்தில் சலுகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்ற தகவலை தொடர்ந்து மூத்த குடிமக்கள் தற்போது மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Tags :