Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன எல்லையில் எல்லாவித சவால்களையும் எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயார் - ராணுவ தளபதி நரவானே

சீன எல்லையில் எல்லாவித சவால்களையும் எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயார் - ராணுவ தளபதி நரவானே

By: Karunakaran Fri, 04 Sept 2020 8:02:06 PM

சீன எல்லையில் எல்லாவித சவால்களையும் எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயார் - ராணுவ தளபதி நரவானே

கடந்த 29ம் தேதி இரவு எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதனை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் ராணுவம் அறிவித்தது.

பாங்காங் சோ ஏரியின் வட கரையில் பிரச்சனை உள்ள நிலையில், தென் கரையிலும் சீனா பிரச்சனை செய்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நேற்று லடாக்கின் லே பகுதிக்கு சென்றார். 2 நாள் பயணமாக அங்கு சென்றுள்ள நரவானே, எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலவரங்களை நேரில் ஆய்வு செய்தார்.

indian soldiers,chinese border,army commander naravane,ladakh ,இந்திய வீரர்கள், சீன எல்லை, ராணுவ தளபதி நரவனே, லடாக்

இந்த ஆய்வுகளுக்கு பின் லே பகுதிக்கு திரும்பிய ராணுவ தளபதி நரவானே, லே பகுதியை அடைந்த பிறகு நான் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தேன். அதிகாரிகளுடன் பேசினேன். வீரர்களின் மன உறுதி அதிகமாக உள்ளது. மேலும் அவர்கள் எல்லாவித சவால்களையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். எல்.ஐ.சி. பகுதி சற்று பதற்றமாக உள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளதாக கூறினார்.

மேலும் அவர், எல்லையில் கடந்த 2-3 மாதங்கள் பதற்றமான சூழ்நிலை உள்ளது. பதற்றத்தை தணிக்க சீனாவுடன் ராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்காலத்திலும் இந்த பேச்சுவார்த்தைகள் தொடரும். இந்த பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அத்துடன் எல்லையில் தற்போதுள்ள நிலை மாறாமல் இருப்பதை உறுதி செய்வோம் என்று கூறினார்.

Tags :