Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய படைகள் வெளியேறணுமாம்: ஆட்சிக்கு வந்தவுடனேயே அறிவுறுத்திய மாலத்தீவு அதிபர்

இந்திய படைகள் வெளியேறணுமாம்: ஆட்சிக்கு வந்தவுடனேயே அறிவுறுத்திய மாலத்தீவு அதிபர்

By: Nagaraj Sun, 19 Nov 2023 7:58:08 PM

இந்திய படைகள் வெளியேறணுமாம்: ஆட்சிக்கு வந்தவுடனேயே அறிவுறுத்திய மாலத்தீவு அதிபர்

மாலத்தீவு: இந்திய படைகள் வெளியேறுங்கள்... மாலத்தீவு அதிபராக முகமது முய்ஸு பதவியேற்ற நிலையில், அதற்கு மறுநாளே அங்குள்ள இந்தியப் படைகள் வெளியேறுமாறு அவர் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மாலத்தீவு.. இது நிலப்பரப்பு அடிப்படையில் குட்டி நாடாக இருந்தாலும் கூட புவிசார் அரசியலில் இது முக்கியமான இடத்தில் உள்ளது. இதனால் மாலத்தீவு நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மாலத்தீவில் இதற்கு முன்பு அதிபராக இருந்தவர் ப்ராஹிம் முகமது. இந்தியா ஆதரவு நிலைப்பாடு கொண்ட அவரது காலத்தில் தான் இந்தியா மாலத்தீவு உறவுகள் மேம்பட்டது. மாலத்தீவுக்கு இந்தியா பல உதவிகளை மேற்கொண்டது.

மாலத்தீவு அதிபர்: மேலும், மாலத்தீவுக்கு இந்திய ராணுவமும் அனுப்பப்பட்டது. அங்குள்ள ரேடர்களை கவனிக்க இந்திய ராணுவம் அங்கே இருந்தது. இருப்பினும், இதை மாலத்தீவு ஜனநாயக கட்சியின் முகமது முய்ஸு கடுமையாக எதிர்த்தார். மாலத்தீவில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில், முகமது முய்ஸு இதை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்தார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்த நிலையில், அவர் தேர்தலில் வெல்லவும் செய்தார்.

maldives,chinese support,indian forces,official,to leave ,மாலத்தீவு, சீன ஆதரவு, இந்திய படைகள், அதிகாரப்பூர்வம், வெளியேறணும்

இதற்கிடையே முகமது முய்ஸு மாலத்தீவு அதிபராகச் சமீபத்தில் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார். இந்தச் சந்திப்பின் போது தான், மாலத்தீவில் உள்ள இந்திய வீரர்களைத் திரும்பப் பெறுமாறு முகமது முய்ஸு அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா ராணுவம்: மாலத்தீவில் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை நிர்வகிக்க சுமார் 70 இந்திய வீரர்கள் அங்கே உள்ளனர். மேலும், மாலத்தீவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திலும் இந்தியப் போர்க் கப்பல்கள் ரோந்து பணிகளை மேற்கொள்கிறது.

இதற்காகவே இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருக்கிறார்கள். இருப்பினும், முகமது முய்ஸு தேர்தல் பிரச்சாரத்தின் சமயத்திலேயே அங்குள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என்று கூறியிருந்தார். அதன்படி இப்போது அதிபர் பதவியை ஏற்றவுடன் அவர் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது மாலத்தீவு அதிபராக உள்ள முகமது முய்ஸு சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படுகிறார்.

Tags :