Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாய்மொழியில் பேசிய இந்திய பெண்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாய்மொழியில் பேசிய இந்திய பெண்

By: Nagaraj Sat, 07 Nov 2020 8:24:18 PM

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாய்மொழியில் பேசிய இந்திய பெண்

நியூசிலாந்தில் இந்திய பெண் முதன் முறையாக அமைச்சராக பொறுப்பேற்று நாடாளுமன்றத்தில் தன் தாய்மொழியில் பேசிய வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளிப் பெண்ணான பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியூசிலாந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட யாரும் இதுநாள் வரை அமைச்சராக இருந்து இல்லை. இதனால் பிரியங்கா ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெசிந்தா ஆண்டெர்சன் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.

முதல் கட்டமாக 5 அமைச்சர்களுடன் பிரதமர் ஜெசிந்தா தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்து அதில் ஒரு அமைச்சராக பிரியங்கா ராதாகிருஷ்ணனை தேர்வு செய்தார்.

பிரியங்கா ராதாகிருஷ்ணன் 1979ம் வருடம் கேரள குடும்பத்தில் பிறந்தார். சிங்கப்பூரில் தான் அவர் பள்ளிக் கல்வியை தொடங்கினார். பின்னர் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த பிரியங்கா, 2006ம் வருடம் நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார்.

new zealand,parliament,text,malayalam,indian woman ,நியூசிலாந்து, நாடாளுமன்றம், உரை, மலையாளம், இந்திய பெண்

அதன் பின்னர் 2017ம் வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா தோல்வியடைந்தார். ஆனாலும் 2019ம் வருடம் விவகாரத்துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. இந்த முறையும் தேர்தலில் தோல்வியடைந்த பிரியங்கா சமூக மற்றும் தன்னார்வலர் துறை, வேலைவாய்ப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014ம் வருடம் பிரியங்கா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் முதன் முதலில் பேசும் போது தனது உரையை ஆங்கிலத்தில் தொடராமல், தாய்மொழியான மலையாளத்தில் பேசிவிட்டு அதன் பிறகு தன் உரையைத் தொடங்கினார்.

இந்த வீடியோவை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இதனால் இந்திய பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|