Advertisement

பதக்க வேட்டை நடத்திய இந்திய மல்யுத்த அணி வீரர்கள்

By: Nagaraj Mon, 22 Aug 2022 5:47:14 PM

பதக்க வேட்டை நடத்திய இந்திய மல்யுத்த அணி வீரர்கள்

சோபியா: பல்கேரியாவில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் அசத்தி உள்ளளனர்.

இந்திய மகளிர் அணி 2 ஆம் இடமும், ஆண்கள் அணி 3 ஆம் இடமும் பெற்று நிறைவு செய்திருக்கிறது. ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் ஆன்டிம் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஜீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை ஆன்டிம் பங்கல் படைத்துள்ளார்.

sports,enthusiasts,medals,accumulated,championships,wrestling ,விளையாட்டு, ஆர்வலர்கள், பதக்கங்கள், குவித்தனர், சாம்பியன்ஷிப், மல்யுத்தம்

உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில், மகளிர் பிரிவில் 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலமும், ஆடவர் பிரீஸ்டையில் பிரிவில் 1 வெள்ளி, 6 வெண்கலமும், ஆடவர் கிரேக்க ரோமன் பிரிவில் 2 வெண்கலமும் இந்திய அணி வீரர்கள் வென்றுள்ளனர்.

அமெரிக்கா, ஈரான், அஜர்பைஜான், துருக்கி, உக்ரைன் மற்றும் ஜப்பான் போன்ற முன்னணி மல்யுத்த நாடுகளுக்கு எதிராக போட்டியிடும் போது இந்திய வீரர் வீராங்கனைகளின் சிறப்பான செயல்திறன் நிச்சயமாக பாராட்டுக்குரியது.

2011ஆம் ஆண்டு மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்ற இந்திய அனியினர், நடப்பாண்டில் சிறப்பாக செயல்பட்டு 16 பதக்கங்களை குவித்திருப்பது, இந்தியாவில் மல்யுத்தம் விளையாட்டின் வளர்ச்சியை குறிக்கிறது என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|
|