Advertisement

இந்திய கொரோனா பாதிப்பு 7000ல் இருந்து 10000 சென்றது

By: vaithegi Thu, 13 Apr 2023 11:31:52 AM

இந்திய கொரோனா பாதிப்பு 7000ல் இருந்து 10000 சென்றது

இந்தியா: நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு கொண்டு வருகிறது . அந்த வகையில் இந்தியாவில் நேற்று 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 10,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 10158 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தம் 44 ஆயிரத்து 998 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன.

corona,treatment ,கொரோனா ,சிகிச்சை

நேற்று 7000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 3000 பேர் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து நாடு முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன.

Tags :
|