Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தற்போது 2,380 ஆக சரிவு

இந்தியாவின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தற்போது 2,380 ஆக சரிவு

By: vaithegi Sun, 07 May 2023 3:54:47 PM

இந்தியாவின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தற்போது 2,380 ஆக சரிவு

இந்தியா: இந்தியாவின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தற்போது 2,380 ஆக குறைந்து உள்ளது. இதையடுத்து தொற்று பாதிப்பு குறைந்து வருவது பொதுமக்கள் மற்றும் அரசுகளுக்கும் நிம்மதி அளிக்கும் வகையில் உள்ளது....

கொரோனா தொற்று நோய் மிகவும் உயர்ந்து வந்ததால் மீண்டும் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வந்தது. எனவே இதன்விளைவாக படிப்படியாக தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது.

corona,india ,கொரோனா ,இந்தியா


இதனை அடுத்து கடந்த 24 மணி நேர நிலவரப்படி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,380 ஆக குறைந்து உள்ளது. மேலும், தற்போது 27,212 பேர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் தொற்று நோய் மீட்பு விகிதம் 98.75 சதவீதமாக உள்ளதாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

அதிலும் குறிப்பாக, இதுவரை மட்டும் நோயிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,44,10,738 ஆக உள்ளது. அதேபோல், இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது.

Tags :
|