Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதம் .. மத்திய அரசு தெரிவிப்பு

நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதம் .. மத்திய அரசு தெரிவிப்பு

By: vaithegi Fri, 01 Sept 2023 11:28:27 AM

நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதம்  .. மத்திய அரசு தெரிவிப்பு

இந்தியா: தேசிய புள்ளியியல் அலுவலகம் 2023-24 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதனை அடுத்து அதன்படி, முதலாம் காலாண்டு ஜிடிபி 7.8% ஆகவுள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் ஜிடிபி 13.1 சதவீதமாகயிருந்தது.

வேளான் துறையின் வளர்ச்சி 3.5% வளர்ச்சி அடைந்து உள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அது 2.4% ஆக இருந்தது. ஆனால் அதேசமயம், உற்பத்தித் துறையில் வளர்ச்சி 6.1-லிருந்து 4.7% ஆக குறைந்து உள்ளது.

central govt.,gdp ,மத்திய அரசு ,ஜிடிபி


மேலும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.8% ஆக உள்ள நிலையில் சீனாவின் ஜிடிபி 6.3% ஆக உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு சேவைத் துறையின் வளர்ச்சியும் மத்திய அரசின் மூலதன செலவினமும் முக்கியக் காரணம் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த போதிலும், இந்தியாவில் சேவைத் துறை வளர்ச்சி குறிப்பிடும்படியாக உள்ளது என எஸ் அண்ட் பி குளோபல் தெரிவித்திருந்தது.

Tags :