Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் தங்கம் இறக்குமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 30% குறைவு

இந்தியாவின் தங்கம் இறக்குமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 30% குறைவு

By: vaithegi Mon, 10 Apr 2023 12:45:14 PM

இந்தியாவின் தங்கம் இறக்குமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 30% குறைவு

புதுடெல்லி: மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் 2022 பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாதங்களில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி ரூ.3.69 லட்சம் கோடியாக இருந்தது.

ஆனால் இது கடந்த 2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில் ரூ.2.6 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 30% குறைவு ஆகும்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதலே தங்கம் இறக்குமதி சரிந்து கொண்டு வருகிறது. தங்கம் மீதான அதிக சுங்க வரி மற்றும் சர்வதேச பொருளாதார மந்தநிலை ஆகியவையே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

gold,import,india ,தங்கம் ,இறக்குமதி

ஆனால் அதேநேரம் இதே காலத்தில் (2022-23) வெள்ளி இறக்குமதி 66% அதிகரித்து, 43 ஆயிரம் கோடியாகியுள்ளது.

இதே காலத்தில் தங்கம் இறக்குமதி குறைந்த போதிலும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை சரியாகவில்லை. மேலும் 2022-23-ல் வர்த்தக பற்றாக்குறை ரூ.20.25 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021-22-ல் ரூ.14.1 லட்சம் கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|