Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் .. (ஐஎம்எப்) தெரிவிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் .. (ஐஎம்எப்) தெரிவிப்பு

By: vaithegi Wed, 11 Oct 2023 11:43:54 AM

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.3% ஆக இருக்கும்   ..  (ஐஎம்எப்) தெரிவிப்பு

இந்தியா: இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நடப்பு 2023-24 நிதியாண்டில் 6.1 சதவீதமாகவும் அடுத்த நிதியாண்டில் 6.3% ஆகவும் இருக்கும் என்று ஐஎப்எப் ஏற்கெனவே கணித்திருந்தது. வளரும் நாடுகளிலேயே அதிக ஜிடிபி வளர்ச்சியைக் கொண்டதாக இந்தியா விளங்குகிறது எனவும் கடந்த ஏப்ரல் மாதம் ஐஎம்எப் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஐஎம்எப் அமைப்பின் வருடாந்திர கூட்டம் மொராக்கோ நாட்டின் மரக்கேஷ் நகரில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இதில் ஐஎம்எப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது: -கரோனா பெருந்தொற்று மற்றும் பிற சர்வதேச பிரச்சினைகள் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவு காணப்படுகிறது. ஜிடிபி வளர்ச்சி மெதுவாகவும், சீரற்றதாகவுமுள்ளது.

imf,gdp,world economic development ,ஐஎம்எப்,ஜிடிபி ,உலக பொருளாதார வளர்ச்சி


எனவே நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 3% ஆகவும் அடுத்த நிதியாண்டில் 2.9% ஆகவும் இருக்கும். அதேநேரம், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.3% ஆக இருக்கும். கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட நுகர்வு உயர்ந்ததால், முந்தைய கணிப்பான 6.1%-ஐவிட ஜிடிபி வளர்ச்சி 0.2% அதிகரிக்கும். அடுத்த நிதியாண்டில் இது 6.3% ஆக இருக்கும்.

மேலும் சீனாவைப் பொருத்தவரை நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5% ஆக இருக்கும். இது முந்தைய கணிப்பைவிட 0.2% குறைவு. இதுபோல அடுத்த நிதியாண்டில் இது 4.2% ஆக இருக்கும். இது முந்தைய கணிப்பைவிட 0.3% குறைவு என அதில் கூறப்பட்டுவுள்ளது.

Tags :
|
|