Advertisement

இந்தியாவின் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு

By: vaithegi Mon, 17 Apr 2023 09:50:27 AM

இந்தியாவின் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு

இந்தியா: புதிதாக 9111 பேருக்கு கொரோனா ... கொரோனா வைரசின் வீரியமானது குறைந்து நம்மை விட்டு ஒழிந்து விட்டதாக நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் புது புது வடிவங்களில் நம்மை சுற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2019-ம் வருடத்தின் இறுதியில் புயலை கிளப்பிய இந்த கொரோனா வைரஸ் 2020-ம் வருடத்தின் தொடக்கத்தில் உலகை ஒரு கலக்கு கலக்க பிறகு உருமாற தொடங்கியது. எனவே இதன் காரணமாக முதலில் ஒரு அலை உருவானது. அதன் பிறகு டெல்டா பிளஸ் என்ற 2-வது மோசமான அலை உருவானது. இதில் தான் நிறைய உயிர்கள் பறிக்கப்பட்டது.

அதன் பிறகு 2021-ம் வருடம் ஓமைக்ரான் என்ற புதிய வடிவத்துக்கு மாறி அதனுடைய ஆட்டம் முடிவுக்கு வரத் தொடங்கியது. தற்போது இந்தியா முழுக்க எக்ஸ் பிபி.1.16 வகை வைரஸ் தான் மிக வேகமாக பரவும் ஆற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்பது உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது ஆறுதலான விஷயமாக மாறியது. இந்த வைரஸ் பாதித்தால் 2 நாட்களிலேயே குணமாகிவிடும்.

corona,india,virus ,கொரோனா ,இந்தியா,வைரஸ்


எனினும் கடந்த சில தினங்களாகவே இந்த வைரஸ் பரவல் கணிக்க முடியாத அளவுக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி பாதிப்பானது 12000 என்ற அளவில் இருக்கிறது. இது 50,000 என்று அளவிற்கு கூட உயரும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நிபுணர்கள் இதில் மாறுபட்டுள்ளனர். அதாவது மே மாதம் புதிய வகை கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் எனவும் இன்னும் சுமார் பத்து நாட்களில் இந்த கொரோனா வைரஸ் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. அதன் பிறகு இதனுடைய தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மட்டும் 9111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது. கேரளா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகிவுள்ளது.


Tags :
|
|