Advertisement

இந்தியாவின் கடந்த 24 மணி நேர புதிய பாதிப்பு

By: vaithegi Wed, 22 Mar 2023 11:16:59 AM

இந்தியாவின் கடந்த 24 மணி நேர புதிய பாதிப்பு

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.26 கோடியாக உயர்வு.

இதனை அடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 918 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

corona,union ministry of health ,கொரோனா ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,026 ஆக பதிவாகியுள்ளது.இந்தியாவில் இதுவரை மட்டும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,813 ஆக உள்ளது.

மேலும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,60,279 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை மட்டும் 220,65,21,180 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 7,673 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Tags :
|