Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்திற்கு முன் அதே பிரச்சினையை சந்தித்த இண்டிகோ விமானம்

கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்திற்கு முன் அதே பிரச்சினையை சந்தித்த இண்டிகோ விமானம்

By: Karunakaran Tue, 11 Aug 2020 1:26:25 PM

கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்திற்கு முன் அதே பிரச்சினையை சந்தித்த இண்டிகோ விமானம்

துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தின் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்கியபோது சறுக்கி 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 140 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கனமழை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விமான நிலையத்திற்கு மேலே வட்டமடித்ததாகவும், இரண்டு முறை தரையிறக்க முயன்று தோல்வியடைந்து 3-வது முறையாக தரையிறக்கும்போது விபத்திற்குள்ளானதாக ‘Flightradar24’ என லைவ் வெப்சைட் தகவல் அளித்தது.

indigo flight,kozhikode,air india,plane crash ,இண்டிகோ விமானம், கோழிக்கோடு, ஏர் இந்தியா, விமான விபத்து

இந்நிலையில் ஏர் இந்தியா விமான விபத்து நடப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இண்டிகோ விமானம் பெங்களூருவில் இருந்து கரிப்பூர் வந்தபோது, கனமழை காரணமாக விமானியால் முதல் முறை தரையிறக்க முடியவில்லை. 2-வது முறையாகத்தான் தரையிறக்க முடிந்தது என்பது தெரிய வந்துள்ளதாக விமான பாதுகாப்பு நிபுணர் கேப்டன் அமித் சிங் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தரையிறங்கிய அதே 10-வது ஓடுதளத்தில் இண்டிகோ விமானம் தரை இறங்கியுள்ளது. முதல்முறை தரையிறங்கும் முயற்சி இண்டிகோவுக்கும் தோல்வியில் முடிந்துள்ளது. கனமழை பெய்ததால் விமானத்தை தரையிறக்கக் கூடிய அளவிற்கு தெளிவான பார்வை கிடைக்காமல் இருந்திருக்கலாம் அல்லது மேகங்கள் தரையிறங்கக் கூடிய ஓடுதளத்தை மறைத்திருக்கிலாம் என அமித் சிங் கூறியுள்ளார்.

Tags :