Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய-ஜப்பானிய ராணுவம் ‘தர்மா கார்டியன்’ என்ற மாபெரும் ராணுவப் பயிற்சி

இந்திய-ஜப்பானிய ராணுவம் ‘தர்மா கார்டியன்’ என்ற மாபெரும் ராணுவப் பயிற்சி

By: Nagaraj Fri, 17 Feb 2023 10:13:30 AM

இந்திய-ஜப்பானிய ராணுவம் ‘தர்மா கார்டியன்’ என்ற மாபெரும் ராணுவப் பயிற்சி

புதுடெல்லி: ஜப்பானின் ஷிகா மாகாணத்தில் உள்ள இமாசு முகாமில் இந்திய-ஜப்பானிய ராணுவம் ‘தர்மா கார்டியன்’ என்ற மாபெரும் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பயிற்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
பயிற்சி மார்ச் 2ம் தேதி வரை 2 வாரங்கள் நடக்கிறது. தற்போதைய சர்வதேச சூழ்நிலையில் இந்தியா மற்றும் ஜப்பான் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களின் பின்னணியில் இது குறிப்பிடத்தக்கது என்று இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் ரெஜிமென்ட் மற்றும் ஜப்பான் ராணுவத்தின் தரைப்படை வீரர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் படைப்பிரிவு கடந்த 12ம் தேதி அங்கு இணைந்துள்ளது. வனப்பகுதி, நகர்ப்புறம், சிறு நகர பகுதி என பல இடங்களில் இப்பயிற்சி நடக்கிறது.

இதுகுறித்து, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய-ஜப்பான் கூட்டு ராணுவ போர் பயிற்சி இரு ராணுவமும் யுத்த உத்திகளை பகிர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும். தத்தமது அனுபவங்களையும், தொழில்நுட்ப அறிவையும் பகிர்ந்து கொள்ள பயன்படும்.உடல் தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கூட்டாக திட்டமிடல், கூட்டாக வியூகம் வகுத்தல் ஆகியவற்றில் ஈடுபட முடியும். மேலும், இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிப்பதுடன் இருதரப்பு உறவும் வலுப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

armies,india,japan,new delhi,war training , இந்தியா, ஜப்பான், புதுடெல்லி, போர் பயிற்சி, ராணுவங்கள்


Tags :
|
|
|