வீட்டிற்குள் புகுந்த உடும்பு: தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
By: Nagaraj Mon, 20 Nov 2023 07:18:10 AM
பல்லடம்: பல்லடம் அருகே பொங்கலூர் தேவணம்பாளையத்தில் உடும்பு ஒன்று ஒரு வீட்டுக்குள் திடீரெனப் புகுந்தது.
உடும்பு வீட்டிற்குள் புகுந்த போது அதை அந்த வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த உடும்பினை லாவகமாக பிடித்தனர். பின்னர் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடும்பை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விடுவதற்காக அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
வீட்டிற்குள் உடும்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags :
home |
ubudu |