Advertisement

மியான்மரில் இராணுவம் நடத்திய தாக்குதல் குறித்த தகவல்

By: Nagaraj Tue, 14 Mar 2023 08:51:28 AM

மியான்மரில் இராணுவம் நடத்திய தாக்குதல் குறித்த தகவல்

மியான்மர்: இராணுவம் தாக்குதல்... மியன்மாரின் தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள மடாலயத்தில் அந்நாட்டு இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, கிளர்ச்சிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ‘நான் நெய்ன்’ கிராமத்தின் மீது இராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியதாக கரேனி தேசிய பாதுகாப்பு படை தற்போது தெரிவித்துள்ளது. ‘உள்ளூர் நேரப்படி சுமார் 16:00 மணியளவில் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு இராணுவ ஆட்சிக்குழுவின் விமானப்படை மற்றும் பீரங்கிகள் கிராமத்திற்குள் நுழைந்தன.

myanmar,coup,military,opposition groups,conflict ,மியான்மர், ஆட்சிக்கவிழ்ப்பு, இராணுவம், எதிர்ப்பு குழுக்கள், மோதல்

மேலும் அவர்கள் மடாலயத்திற்குள் மறைந்திருந்த கிராம மக்களைக் கொன்றனர்’ என கரேனி தேசிய பாதுகாப்பு படை கூறியது. குறைந்தது 30 பொதுமக்களும் மூன்று பௌத்த பிக்குகளும் உயிரிழந்ததாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

மியன்மார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து அதன் இராணுவத்திற்கும் ஆயுதமேந்திய எதிர்ப்புக் குழுக்களுக்கும் இடையில் மோதல் அதிகரித்து வருகிறது. தலைநகர் நே பை தாவ் மற்றும் தாய்லாந்தின் எல்லையை ஒட்டிய ஷான் மாநிலத்தில் சில கடுமையான சண்டைகள் நடந்துள்ளன.

Tags :
|