Advertisement

இந்தியா வழங்கிய கடன்தொகை குறித்து வெளியான தகவல்

By: Nagaraj Wed, 31 May 2023 7:35:12 PM

இந்தியா வழங்கிய கடன்தொகை குறித்து வெளியான தகவல்

கொழும்பு: இந்தியா வழங்கிய கடன் தொகையை இலங்கை இன்னும் ஒரு வருடத்திற்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க பயன்படுத்த முடியும்.

கடந்த ஆண்டு இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், மருந்து, உணவுப் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு உதவி செய்தன.

இந்தியா மொத்தமாக ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் கொடுத்தது. அதன் ஒரு பகுதியாக ரூ.8,200 கோடி கடன் வழங்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் பாரத ஸ்டேட் வங்கிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்தானது.

crore loan,one more year,sri lanka, ,ஒப்பந்தம், கடனின் காலம் மார்ச் 2024, கடன் தொகை

இந்தக் கடனின் காலம் மார்ச் 2024 வரை உள்ளது. எனினும், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, மருந்து, உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் வாங்குவதற்கு பணம் தேவைப்படுவதால் மேற்படி கடன் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்குமாறு கோரியது. இந்தியாவும் ஒப்புக்கொண்டு ரூ.8,200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது.

இது தொடர்பான திருத்த ஒப்பந்தம் இலங்கை அமைச்சர் சினேகன் சீமா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் தகவலின்படி, இந்தியா வழங்கிய கடன் தொகையை இலங்கை இன்னும் ஒரு வருடத்திற்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க பயன்படுத்த முடியும்.

Tags :