Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பஞ்சாங்கத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு இருந்த புயல் குறித்த தகவல்

பஞ்சாங்கத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு இருந்த புயல் குறித்த தகவல்

By: Nagaraj Wed, 25 Nov 2020 9:52:03 PM

பஞ்சாங்கத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு இருந்த புயல் குறித்த தகவல்

பஞ்சாங்கத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு இருக்கும் தகவல்... நவம்பர் 25-ம் தேதி அன்று புயல் ஏற்படும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான புயல் அதி தீவிர புயலாக மாறி, நாளை காலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, தமிழக அரசு, இன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், பேருந்து மற்றும் ரயில் மற்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நிவர் புயல் எரொலியாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை-க்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

almanac,prediction,storm,sarvari year,affect ,பஞ்சாங்கம், கணிப்பு, புயல், சார்வாரி வருடம், பாதிக்கும்

இந்த நிலையில், நவகிரகங்களின் இடப் பெயர்ச்சியை வைத்து பஞ்சாங்கத்தில் பலன்கள் கணிக்கப்படுகின்றன. 2020ஆம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி சென்னையில் விடிய விடிய மழை பெய்யும் என்று பல மாதங்களுக்கு முன்பே மிக துல்லியமாக பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் குறைத் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கும் என்றும், இயற்கை சீற்றம் காரணமாக சென்னை, கடலூர், மாயவரம், திருவாரூர், மதுரை, திருச்சி, ராமேஸ்வரம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கும் என்று 2020-2021 -ம் ஆண்டு, சார்வரி வருடத்திய சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

Tags :
|