Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்

அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்

By: vaithegi Sat, 30 July 2022 4:31:00 PM

அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி பேசிய அத்துறையின் அதிகாரி தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளதால் அதிக அளவில் அதாவது கொரோனா காலகட்டத்திற்கு முன்பு உள்ளதை போல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதை அடுத்து இந்த நேரத்தில் ஊழியர்கள் பலரும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் பேருந்துகளில் டிரைவர்-கண்டக்டர்கள் பற்றாக்குறை நிலவி கொண்டு வருகிறது.இதை கருத்தில் கொண்டே இந்த பணி நியமன அறிவிப்புகள் வெளியிடப்படபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

government transport,vacancy,appointment ,அரசு போக்குவரத்து,காலிப்பணியிடம், நியமனம்

மேலும் தற்போதைய பற்றாக்குறை நிலையை சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் கூடுதலாக 400 டிரைவர் – கண்டக்டர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து இவர்கள் சாலை போக்குவரத்து இன்ஸ்டிடியூட் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :