Advertisement

வாட்ஸ்அப் காண்டாக்ட் கார்டு அம்சம் குறித்த தகவல்

By: vaithegi Tue, 29 Nov 2022 6:22:31 PM

வாட்ஸ்அப் காண்டாக்ட் கார்டு அம்சம் குறித்த தகவல்

இந்தியா: வாட்ஸ்அப் மெசேஜ், ஆடியோ, வீடியோ உள்ளிட்ட அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி கொண்டு வருகிறது. மேலும் இவற்றில் புதிய அப்டேட்களையும் வெளியிட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் “கம்யூனிட்டிஸ்” என்ற புதிய வசதி கொண்டு வரப்பட்டது.

எனவே இதன் மூலம் தற்போது வாட்ஸ் அப் குழுக்களுடனான உரையாடல் மிகவும் எளிதாகி விட்டது. மேலும் இதில் என்ட்டு என்ட் என்க்ரிப்ஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால் பயனர்கள் மத்தியில் இது வரவேற்பை பெற்றது.அதன் தொடர்ச்சியாக வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட்ஸ்கள் ஸ்டேட்டஸ் வசதி விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

contact card,whatsapp , காண்டாக்ட் கார்டு,வாட்ஸ்அப்

இதனை அடுத்து தற்போது “Polls” உருவாக்கும் அம்சமும் வந்துள்ளது. இந்த நிலையில் வாட்ஸ்அப் காண்டாக்ட் கார்டு அம்சம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் கீழ் ஒரு சாட்டில் காண்டாக்ட் கார்டுகளை பகிர முடியும். இந்த அம்சம் தற்போது பீட்டா பயணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பெறுவது மிகவும் எளிது வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்தவுடன் என்ட்ரி பாயிண்ட்டில் “காண்டாக்ட்ஸ்” என்ற ஆப்ஷன் இடம் பெற்றிருக்கும். காண்டாக்ட்ஸ் என்கிற விருப்பத்தை கிளிக் செய்தவுடன் ஷேர் காண்டாக்ட் என்கிற விண்டோ தோன்றும் அதனை பயன்படுத்தி விவரங்களை பகிரலாம். இது விண்டோஸ் 2.2247.2.0 பீட்டா பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும்..

Tags :