Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள் குறித்து வெளியான தகவல்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள் குறித்து வெளியான தகவல்

By: Monisha Mon, 01 June 2020 12:18:49 PM

அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள் குறித்து வெளியான தகவல்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக்காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 10 காட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்த விபரம் வருமாறு:-

* தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களில், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை எந்தவித குறைப்பாடும் இன்றி மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

* அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்கும் எந்தவித ஆக்கபூர்வமான பாதுகாப்பு திட்டங்களும் இன்றி மொத்தமாக தளர்த்தி பெயரளவுக்கு ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது வேதனைக்குரியது.

dmk leader mk stalin,all party meeting,key resolutions,reservation,electricity bill ,தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்,அனைத்துக்கட்சி கூட்டம்,முக்கிய தீர்மானங்கள்,இடஒதுக்கீடு,மின்சார சட்டத்திருத்த மசோதா

* ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.7 ஆயிரத்து 500-ம், மாநில அரசின் சார்பில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்.

* விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தையும், வழிபாட்டு தலங்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கான கட்டண சலுகைகளை ரத்து செய்யவும் கொண்டுவரப்படும் புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.

* கொரோனா பேரிடரில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றும் மிக முக்கிய பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் மனமுவந்த பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறோம். ஊரடங்கு காலத்தில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிய தமிழக மக்களுக்கும் நன்றி. இனி வரும் நாட்களிலும் அரசின் சுகாதார அறிவுரைகளுக்கு மதிப்பளித்து கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனா நோய் தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடிகளாக விளங்கவேண்டும்.

Tags :